சிவகாசி : ''வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறும் போது அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் ,''என ,அ.தி.மு.க., கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம் வலியுறுத்தினர்.
சிவகாசி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விவேன்ராஜ், பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், ராம்ராஜ் முன்னிலை வகித்தனர் . கவுன்சிலர்கள் விவாதம்:ஆழ்வார் ராமானுஜம் (அ.தி.மு.க.,): செங்கமலப்பட்டி வடமலாபுரம் ரோட்டில் புதிய பாலம் அமைக்கப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வில்லை. கிராமங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறும் போது ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தலைவர்: வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பாலம் முழுமையாக வேலை முடியவில்லை. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.மீனாட்சி சுந்தரி (அ.தி.மு.க.,): புதுக்காலனியில் ரோடு சேதமடைந்துள்ளது. தற்காலிகமாக கிராவல் மண் அடிக்க வேண்டும்.பி.டி.ஓ., : நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெகத்சிங் பிரபு (அ.தி.மு.க.,): முனீஸ் நகர் மக்கள் மயானமின்றி கண்மாய் பகுதியை மயானமாக பயன்படுத்துகின்றனர். மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
பி.டி.ஓ.,: நடவடிக்கை எடுக்கப்படும்.ரீட்டா ஆரோக்கியம் (அ.தி.மு.க.,): விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனி, விஜயலட்சுமி காலனியில் உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை.துணைத்தலைவர்: மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முருகன் (காங்.,): பள்ளபட்டி ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது.
பி.டி.ஓ.,: விரைவில் பாலம் கட்டும் பணிகள் துவங்கும்.சங்கையா (தி.மு.க.,): பள்ளபட்டி ஊராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பிற்காக ரூ.20 ஆயிரம் கேட்கின்றனர்.துணைத் தலைவர்: பணம் கேட்க கூடாது. விசாரிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.