அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் சிவானந்த சுவாமிகள் ஜீவசமாதி கோயில் உள்ளது. புரட்டாசிபவுர்ணமியை முன்னிட்டு 65 வருட குரு பூஜை நடந்தது. சிவானந்தருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் ,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் சார்பில் கே.கே.எஸ் .எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.