விருதுநகர் மாவட்டத்தில் மழை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
விருதுநகர் மாவட்டத்தில் மழை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:18

விருதுநகர் : விருதுநகரில் காலை முதலே மிதமான வெயில் அடித்து வந்த நிலையில் மாலை 5:00 மணிக்கு பலத்த காற்றுடன் 20 நிமிடத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.



ஸ்ரீவில்லிபுத்துாரில் பலத்த காற்று ,ராஜபாளையத்தில் லேசான சாரல் பெய்தது. அருப்புக்கோட்டை மலைப்பட்டி, ஆமணக்குநத்தம், சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் மழை பெய்தது. காரியாபட்டி, அருப்புக்கோட்டை நகர பகுதிகளில் மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்டது.



சாத்துார்: நேற்று மாலை 3:40 மணி முதல் 5:30 மணி வரை இடைவிடாமல் இடி மின்னலுடன் மழை பெய்தது. மெயின்ரோடு, நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு , தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சிவகாசியில் மாலை 4:30 மணிக்கு மேல் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஓடி சிரமத்தை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X