மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., மனு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., மனு
Added : செப் 21, 2021 | |
Advertisement
 

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று நடந்த வேட்புமனு தாக்கலில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கு 2 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 8 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 29 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.அ.தி.மு.க.,வில் மாவட்ட கவுன்சிலர் 19வது வார்டுக்கு சாத்துார் ஓ.மேட்டுபட்டியை சேர்ந்த விஜயலட்சுமி ,விருதுநகர் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வடக்கு ஒன்றிய புரட்சி தலைவி பேரவை செயலாளர் சக்திபாலன் , ராஜபாளையம் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்திற்கு தெற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ராமபிரபு, 15வது வார்டில் புரட்சி தலைவி பேரவை தலைவர் வடிவேலன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சாத்துார்: விருதுநகர் மாவட்ட 19வது வார்டுக்கு தி.மு.க., சார்பில் பகவதி திருவேங்கடசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் குருசாமி ஆகியோருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அரவிந்திடம் வேட்பு மனு செய்தார்.மாவட்டத்தில் நேற்று மட்டும் பல்வேறு காலி பதவிகளுக்கு 52 என இது வரை 87 பேர் வேட்பு மனு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X