தேனி : உத்தமபாளையம் தெற்கு வீதி சங்கீதா. சோப்பு, பவுடர் விற்பனை செய்கிறார். இவர், எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்ரேவிடம் வழங்கிய மனுவில், தொழில், குடும்ப செலவிற்காக உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே வசிக்கும் ரவியிடம் ரூ.2 லட்சம் பெற்றேன். ரூ.20 ஆயிரம் வீதம் வட்டியுடன் மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தினேன். மேலும் பணம் கேட்டு மிரட்டி, கையெழுத்திட்ட புரோநோட்டை காட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். நடவடிக்கை எடுக்க கோரினார்.