எச்சரிக்கை மீறி நீர் தேக்கத்தில் இறங்கும் சுற்றுலா பயணிகள் | தேனி செய்திகள் | Dinamalar
எச்சரிக்கை மீறி நீர் தேக்கத்தில் இறங்கும் சுற்றுலா பயணிகள்
Added : செப் 21, 2021 | |
Advertisement
 

ஆண்டிபட்டி : வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் பின்புறம் தடை செய்யப்பட்ட நீர் தேக்க பகுதியில் ஆபத்தான குளியல் செய்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்குப்பின் கொடைக்கானல், கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்கா பகுதியை ரசித்து செல்வர். அணையின் பின்புறம் பரந்து விரிந்த நீர் தேக்கத்திற்கு சென்று வர யாருக்கும் அனுமதி இல்லை. இப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சுற்றுலா வரும் பயணிகள் சிலர் நீர் தேக்கப்பகுதிக்கு சென்று குளித்து செல்கின்றனர்.

இப்பகுதியை கண்காணிக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள், போலீசார் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்கள் இஷ்டத்திற்கு குழந்தைகளுடன் சென்று நீர் தேக்கத்தில் குளித்து விளையாடுகின்றனர். இப்பகுதியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை, போலீசார் முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X