பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி 3வது வார்டு பங்களாபட்டியில் விவசாய தொழிலாளர்கள் அதிகமுள்ளனர். இங்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டியது.8 கழிப்பறைகள் உள்ள நிலையில் வளாகத்தில் தண்ணீர் வசதியில்லாததால்பூட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வசதி செய்து, விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.