தேனி : தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், கலை இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செந்தில்குமரன் வரவேற்றார். கல்வி உதவித் தொகையை மாவட்ட கல்வி அலுவலர் ராகவன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், திரைக்கலைஞர் சிவாஜி, முத்துக்குமார் பேசினர். பாவெல்பாரதி தொகுத்து வழங்கினார். பொருளாளர் அசோகன் நன்றி கூறினார். மறைந்த ஆசிரியர் அந்தோணிராஜ் குடும்பத்தினர் பங்கேற்றனர்.