அங்கன்வாடி மையங்களில் 'கிச்சன் கார்டன்' அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:32


தேனி : தேனி மாவட்டத்தில் 549 அங்கன்வாடி மையங்களில் உள்ள 'கிச்சன் கார்டன்' தோட்டங்கள் மூலம் பெறும் காய்கறிகளால் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் என 5600 பேர் பயனடைகின்றனர்.



தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் சார்பில் தோட்டக்கலை, தொண்டு நிறுவனங்களோடு இணைந்து 'கிச்சன் கார்டன்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் இட வசதிக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள் பயிரிட்டு அதனை கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு வழங்கி ஊட்டச்சத்து குறைபாடில்லா மாவட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.



549 தோட்டம்:



தேனி மாவட்டத்தில் மொத்தம் 1065 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி வட்டாரத்தில் 53, போடியில் 55, சின்னமனுாரில் 60, கம்பத்தில் 50, க.மயிலாடும்பாறையில் 86, பெரியகுளத்தில் 60, தேனி புறநகரில் 50, தேனி நகரில் 28, உத்தமபாளையத்தில் 107 என மொத்தம் 549 அங்கன்வாடி மையங்களில் 'கிச்சன் கார்டன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



அங்கன்வாடி தோட்டங்களில் மரவள்ளி கிழங்கு, அவரை, வெண்டை, கீரை வகைகள், கொத்தமல்லி, பீட்ரூட், தக்காளி, பப்பாளி உள்ளிட்டவை பயிரிட்டு, ஊழியர்கள் பராமரித்து அறுவடை செய்ய வேண்டும். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமைத்து அல்லது நேரிடையாக வழங்கப்படுகிறது.



இதில் 5600 பேர் பயனாளிகளாக உள்ளனர். 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த தோட்டம் புதுப்பிக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி கூறினார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X