புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் அடுத்தடுத்து திருப்பம்: எம்.பி., பதவியை பா.ஜ.,வுக்கு விட்டுத்தர முடிவு?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 செப்
2021
08:45
பதிவு செய்த நாள்
செப் 21,2021 08:38

புதுச்சேரி : புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கூட்டணியில் நிலவி வந்த குழப்பம், அரசியல் சாராத பிரமுகரின் தலையீட்டால் நீங்கி, பா.ஜ., போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் நேற்று நள்ளிரவு தனது கட்சி மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ரகசிய ஆலோசனை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி., பதவிக்கான தேர்தல் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 15ம் தேதி துவங்கிய மனு தாக்கல், நாளை 22ம் தேதி முடிவடைகிறது. இதுவரை மூன்று சுயேச்சைகள் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். ராஜ்ய சபா எம்.பி., பதவியை கைப்பற்றிட ஆளும் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் முயன்று வருகின்றன.என்.ஆர்.காங்., முடிவு
என்.ஆர்.காங்., சார்பில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்து ராஜ்ய சபா பதவியை தங்களுக்கு விட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு முதல்வர் பதில் கூறாததை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஐசரி கணேஷ் 18ம் தேதி முதல்வரை சந்தித்து பா.ஜ., சார்பில் போட்டியிட ஆதரவு கோரினார். அதற்கும் முதல்வர் பதில் கூறவில்லை.பா.ஜ., வலியுறுத்தல்
இந்நிலையில், பா.ஜ., மேலிட தலைவர்களின் அறிவுறுத்தலின்பேரில் நேற்று முன்தினம் மீண்டும் பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கோரினர். அதற்கு, அவர் பா.ஜ., மேலிடத்தில் பேசிக் கொள்வதாக கூறினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் அவசரமாக அன்று இரவே டில்லி புறப்பட்டு சென்று, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்து விபரங்களை கூறினார்.முக்கிய பிரமுகர் பேச்சு
இந்நிலையில் நேற்று காலை, அரசியல் சாராத பிரமுகர், முதல்வரை நேரில் அழைத்து பேசியுள்ளார். அதில், ராஜ்ய சபா பதவியை பா.ஜ.,விற்கு விட்டுக் கொடுக்க வலியுறுத்தி உள்ளார். அப்போது, நியமன எம்.எல்.ஏ., விவகாரத்தில் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுத்தது உள்ளிட்ட பல சம்பவங்களை குறிப்பிட்டு, ராஜ்யசபா தேர்தலில் என்.ஆர்.காங்., போட்டியிட விரும்புவதாக முதல்வர் கூறினார்.30 நிமிடம் நடந்த பேச்சவார்த்தையில், அரசியல் சாராத பிரமுகரின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பா.ஜ.,வினர், வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
இந்நிலையில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேற்று மாலை, முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.அப்போது, நியமன எம்.எல்.ஏ.,க்களை அவர்களே எடுத்துக் கொண்டுவிட்டனர். அதனால், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு நாம் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம், இரவு 10:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பேசி தீர்வு காணலாம் என ரங்கசாமி கூறினார்.நள்ளிரவில் ரகசிய கூட்டம்
அதன்படி, இரவு 10:06 மணிக்கு அண்ணாமலை ஓட்டலில் ரகசிய கூட்டம் துவங்கியது. முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா,துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கரன், ஆறுமுகம், ரமேஷ், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.சிவா, நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் முதல்வரை போனில் தொடர்பு கொண்டு, கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறினார்.முதல்வருக்கே அதிகாரம்
கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, 'ராஜ்ய சபா எம்.பி., பதவியை பா.ஜ., கேட்கிறது. உங்கள் கருத்தை அறிந்த பிறகே முடிவு எடுக்க வேண்டியுள்ளது. உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்' என்றார்.அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், ராஜ்ய சபா எம்.பி., பதவியை விட்டுக் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தினர். இருப்பினும், மாநில வளர்ச்சி கருதி முதல்வர் எடுக்கும் முடிவை ஏற்பதாக கூறியுள்ளனர். இரவு 11:20 மணிக்கு கூட்டம் முடிந்தது.


சுயேச்சைகளுடன் ஆலோசனை
என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறிய பின், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மூவருடன் 5 நிமிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.அப்போது, பி.ஆர்.சிவா, புதுச்சேரியின் தனித்துவத்தை இழந்துவிடக் கூடாது என வலியுறுத்தினார். இரவு 11.28 மணிக்கு கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ரங்கசாமி வெளியே வந்தார்.அப்போது, அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, 'வழி விடுங்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறியபடி காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதன் மூலம், ராஜ்ய சபா தேர்தலில் பா.ஜ., போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.இந்த கூட்டம் நடந்தபோது, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஓட்டலுக்கு வெளியே, காரில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆயத்தமாகும் தி.மு.க.,
ராஜ்ய சபா தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில் என்.ஆர்.காங்.,-பா.ஜ.,விடையே கடும் போட்டி நிலவுவதை அறிந்த தி.மு.க., இத்தேர்தலில் களம் இறங்க ஆயத்தமாகியது.அதற்காக இரு முறை ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் சென்னை சென்று, கட்சி தலைமையை சந்தித்து விபரங்களை கூறினர். கட்சி தலைமை, 'வெற்றி வாய்ப்பு உறுதி என்றால் மட்டுமே போட்டியிட வேண்டும்' என அறிவுறுத்தியது. அதனையேற்ற புதுச்சேரி தி.மு.க., நிர்வாகிகள், என்.ஆர்.காங்.,-பா.ஜ.,வில் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகளை கவனித்து வருகின்றனர். இவர்களுக்குள் சமரசம் ஏற்படாமல் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், தி.மு.க., தரப்பிலும் வேட்பாளரை களம் இறக்க ஆயத்தமாகி உள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-செப்-202118:56:47 IST Report Abuse
கல்யாணராமன் சு. பாஜகவுக்கு ஐசரி கணேஷை தவிர வேறு ஒருவரும் கிடைக்கவில்லையா ? ஒரு வேளை, SRM கல்வித்தந்தை MPக்கு போட்டியா Vels கல்வித்தந்தையை MPயாக்கலாம்னு என்னமோ ????
Rate this:
Cancel
Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
21-செப்-202114:57:03 IST Report Abuse
Velan Iyengaar அமித் ஷா டக்கு ரங்கசாமி கிட்ட பலிக்காதா? ஆனா பி ஜெ பி காரா பதவிக்கு இப்படி நெருக்குறாளே? இத பாத்து பொதுஜனம் அசிங்கமா நினைக்க மாட்டாளா?
Rate this:
Cancel
Mrs. Marie-Thérèse Evariste - Paris,பிரான்ஸ்
21-செப்-202114:49:08 IST Report Abuse
Mrs. Marie-Thérèse Evariste BJP is very greedy. With just six MLAs they have a Speaker & three nominated MLAs. And now, they want MP post also....selfish & greedy..... Rangaswamy must be very firm and must not give up his decision of nominating his party candidate of his choice.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-செப்-202118:43:57 IST Report Abuse
கல்யாணராமன் சு.why is a French lady interested in the affairs of an Indian state, unless THAT French lady is actually an Indian (male or female) hiding under a fake id ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X