ஈங்கூரில் சூறாவளியுடன் கொட்டிய மழை: முறிந்து விழுந்த சாலையோர மரங்கள் | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஈங்கூரில் சூறாவளியுடன் கொட்டிய மழை: முறிந்து விழுந்த சாலையோர மரங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:20

சென்னிமலை: ஈங்கூர் சுற்று வட்டாரத்தில், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன.

சென்னிமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், டவுன் பகுதியிலும், கிராமங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் ஈங்கூர் சுற்று வட்டாரத்தில் நேற்று கனமழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது. இதனால் சென்னிமலை-பெருந்துறை சாலையில், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலையின் குறுக்கே சாய்ந்த மரங்களால், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், எதிரே பெரிய வாகனங்கள் வந்தபோது விலகி செல்ல வழியின்றி தடுமாறினர். பள்ளி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி சென்றனர். கன மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதேபோல் கோபி அருகே சிறுவலூர் பகுதியில், நேற்று மாலை, 4:45 மணிக்கு திடீரென மழை பெய்தது. மீன்கிணறு, கரிச்சிபாளையம், ஆயிபாளையம் உள்ளிட்ட பகுதியில், 20 நிமிடம் பலத்த மழை பெய்தது. கோபி டவுன் பகுதியில் இரவு, 6:45 மணிக்கு லேசான தூரல் மழை பெய்தது.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X