சி.என்.கல்லூரியில் நவீன ஸ்டேடியம்: அமைச்சர் முத்துசாமி தகவல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
சி.என்.கல்லூரியில் நவீன ஸ்டேடியம்: அமைச்சர் முத்துசாமி தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:21

ஈரோடு: ''ஈரோடு சி.என்.கல்லூரியில் விரைவில் நவீன ஸ்டேடியம் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோட்டில் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, சோலாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக சோலார், கனிராவுத்தர் குளம் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும். மப்சல் பஸ்கள் மாநகர பகுதிக்குள் வந்து செல்வது தடுக்கப்படும். இது தொடர்பாக பஸ் உரிமையாளர், மக்களிடம் கருத்து கேட்கப்படும். ஈரோடு சி.என்.கல்லூரி, மிக விரைவில் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அதன்பின் கல்லூரி வளாகத்தில் காலி இடத்தில், நவீன ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில், அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதேநேரம் கல்லூரியில் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 35 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும். அதற்கும் தேவையான நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X