பிளக்ஸ், பேனர் அகற்ற முடிந்தது கெடு: 'காற்றில் பறந்த உத்தரவு; கட்டடங்களில் சிரிக்குது'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:23

ஈரோடு: மாநகர், மாவட்டத்தில் உயரமான கட்டடங்களில், மேலும் உயரமாக வைக்கப்பட்ட முறைகேடு விளம்பர பலகை, பிளக்ஸ், பேனர்கள் ஜொலிப்பது, அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகளை பார்த்து, சிரிப்பது போல் உள்ளது.


பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் அனுமதி பெறாமல், முறைகேடாக வைத்திருக்கும் விளம்பர பலகைகள், பேனர், பிளக்ஸ்களை, செப்.,20ம் தேதிக்குள் அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நேற்றுடன் இந்த கெடு முடிந்தது. ஈரோடு மாநகர், மாவட்டத்தில் அரசு உத்தரவை நிறைவேற்றுவதில் ஒரு சதவீதம் கூட யாரும் அக்கறை காட்டவில்லை. மாநகர பகுதியில் செங்கோடம்பள்ளம், பழையபாளையம் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் கட்டடங்களில் நேற்றும் ஜொலித்துக் கொண்டுதான் இருந்தன. முறையில்லா பேனர்களை அகற்ற உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஒருவேளை கமிஷனர் உத்தரவை, அவரது சகாக்கள் மறந்து விட்டனரோ என்னவோ? இதேபோல் திண்டல் பகுதியிலும் கண்கவர் வண்ணத்தில் பல இடங்களில் பேனரை காண முடிந்தது.


பு.புளியம்பட்டியில்... : புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதியில், கோவை சாலை வாரச்சந்தை எதிரே, 50 அடி கட்டடத்தின் மீது பேனர் வைத்துள்ளனர். காற்று பலமாக வீசினால் பேனர் விழும். அந்த சமயத்தில் சாலையில் செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவர். நகராட்சி அனுமதி பெறாமல் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பேனர்களை அகற்றுவதிலும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும், மக்கள் தெரிவித்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X