ஈரோடு: ஈரோடு, சூளை, அருள் வேலன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45, தறி பட்டறை தொழிலாளி. மனைவி ஐந்து மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மகன்கள், குடும்பத்தினரிடம் மது குடிக்க பணம் கேட்பார். தர மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவாராம். கடந்த, 19ம் தேதி, மகனிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே, வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் வயிற்றில் கத்தியால் குத்தி கொண்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.