ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு, 2:00 மணியளவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி பறந்தது. பழைய துணி குவியல் மீது பட்டு தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பரவி, பற்றி எரிந்தது. மருத்துவமனை செக்யூரிட்டிகள் தீயணைப்பான் கருவி மூலம் அணைத்தனர். ஈரோடு தீயணைப்பு துறையினர், மேலும் தீ பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டனர்.