வாலிபர் சாவில் சந்தேகம்: உறவினர்கள் ஆர்ப்பாட்டம் | சேலம் செய்திகள் | Dinamalar
வாலிபர் சாவில் சந்தேகம்: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:43

சேலம்: தலைவாசல் அடுத்த வீரகனூர், கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் முத்துவேல், 23, முடி திருத்தும் தொழிலாளி. இவர் கடந்த 10ல், அங்குள்ள ஏரிப்பகுதியில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் சங்க கிளை செயலர் மாசிலாமணி கூறியதாவது: வாலிபர் உடலில், காயங்கள் உள்ளன. எங்கள் அனுமதி பெறாமல், பிரேத பரிசோதனை செய்தது, சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தி உள்ளதால், இதுவரை உடலை வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் கூறுகையில், ''வாலிபர், தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். சந்தேகத்துக்கான எந்த தடயமும் இல்லை,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X