பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 6.47 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சைக்கிள் ஸ்டாண்ட் பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் உலகமாதேஷ், தலைமையாசிரியர் திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.