கிடப்பில் போடப்பட்ட வீடு கட்டும் திட்டம் வீதியில் வாழும் பழங்குடியின மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:53

பந்தலுார்:பந்தலுார் அருகே, குன்றில் கடவு பகுதியில் வீடு கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், பழங்குடியினர் வீதியில் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூடலுார்; நெல்லியாளம் நகராட்சிகள் வாயிலாக பழங்குடியினருக்கு அரசு தொகுப்பு வீடு கட்டும் வகையில், மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது.அதில், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட குன்றில் கடவு பகுதியில், 13 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, உப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் ஒப்பந்த முறையில் வீடு கட்டும் பணி மேற்கொண்டார். பணி துவங்கிய உடன் வேறு நபரிடம் பணிகளை ஒப்படைத்தார். தொடர்ந்து, இப்பகுதியில், நான்கு ஆண்டுகளாக அனைத்து பணிகளும் முழுமை பெறாமல் உள்ளன.சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பயனாளிகளின் ஆதார் அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை வாங்கி வைத்துள்ளார். வீடு குறித்து பழங்குடியினர் கேட்கும் போது, 'ஒதுக்கப்பட்ட நிதி முடிந்துவிட்டது; மாவட்ட கலெக்டர் நிதி தந்தால் மட்டுமே பணிகள் துவக்க முடியும்,' என, தெரிவித்துள்ளார்.மேலும், வீடு கட்ட வருமான சான்றிதழ் தேவை இல்லாத நிலையில், பழங்குடியின மக்களிடம் வருமான சான்று கேட்டுள்ளார். இதனால், பழங்குடியின மக்கள் உள்ள வீடுகளையும் இழந்து, வீதியில் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பழங்குடியினர் கூறுகையில்,'மாவட்ட நிர்வாக அதிகாரிகள், இப்பகுதிகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X