வடிகால் துாய்மை பணி திறம்பட மேற்கொள்ள அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:54

ஊட்டி:ஊட்டி, காந்தள் குருசடி காலனியில் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், மாபெரும் மழை நீர் வடிகால் துாய்மைப்பணி முகாம் துவங்கியது.இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறுகையில்,''மழை நீர் வடிகால் துாய்மை பணி முகாம், மாவட்டம் முழுவதும், ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் ஒரு வாரம் நடக்கும். ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகளை, 6 மண்டலமாக பிரித்து துாய்மை பணி முகாம் செயல்படுத்தப்படுகிறது. நடுத்தர, சிறிய மழை நீர் வடிகால்களில் உள்ள படிவங்களை அகற்றுவதற்கு அனைத்து துாய்மை பணியாளர்களை கொண்டு துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நகராட்சி கமிஷனர் சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.* குன்னுாரில் மார்க்கெட் அருகே, துவங்கிய துாய்மை பணியை, கூடுதல் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நகர் நல அலுவலர் ரகுநாதன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.* நெல்லியாளம் நகராட்சி சார்பில்,பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாலகுமார் மேற்பார்வையில் துாய்மை பணி நடந்தது. துாய்மை பணியாளர்கள் மழைநீர் வழிந்தோடும் கால்வாய்களை துார் வாரி சுத்தப்படுத்தினர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X