கிருஷ்ணகிரி: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எதிர்கோட்டை அடுத்த எட்டகம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 51, லாரி டிரைவர். கடந்த, 19ல் அதிகாலை, 5:00 மணியளவில் லாரியில் கிருஷ்ணகிரி வந்துள்ளார். பர்கூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கந்திக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அங்கு பல்சர் பைக்கில் வந்தவர், அவரது பையிலிருந்த மொபைலை திருட முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை பிடித்து கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பைக்கில் வந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சதீஷ்குமார், 22, என்பதும், பைக்கையும் அவர் திருடி வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் ?கைது செய்து, மொபைல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.