ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆர்வம்: மனு தாக்கல் நாளை நிறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:05

ஊரக உள்ளாட்சிகளில், காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவியிடத்தை நிரப்ப, இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த, 15ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. நாளை, 22ம் தேதி வரையில் மனுக்கள் தாக்கல் செய்யலாம்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவி (எஸ்.சி., பொது) மற்றும் வடக்கு ஒன்றியம் போளியகவுண்டன்பாளையம், ஜமீன் முத்துார் ஊராட்சிகளில் தலா ஒரு ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களை நிரப்ப இடைத்தேர்தல் நடக்கிறது.


இந்நிலையில், தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நாராயணமூர்த்தி, கலைச்செல்வி, மாமரத்துப்பட்டியை சேர்ந்த சரஸ்வதி ஆகியோர், ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திக்கிடம் மனு தாக்கல் செய்தனர். வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு நேற்று வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.ஆனைமலைஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு, நேற்று காலை, தி.மு.க., சார்பில் போட்டியிடும் திவான்சாபுதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி கலைவாணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சசிக்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன், ஒன்றிய பொறுப்பாளர்கள் தேவசேனாதிபதி, கன்னிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.மனு தாக்கலுக்கு தி.மு.க.,வினர் வரிசையாக கார்களில் அணிவகுத்து, பெருங்கூட்டமாக நடந்து வந்தனர். கொரோனா பரவலை தவிர்க்க, சமூக விலகலை பின்பற்றி, முகக்கவசம் அணிய வேண்டுமென்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அத்துமீறலில் ஈடுபட்டனர். ஒன்றிய அலுவலக வளாகத்தில், பலரும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.


உடுமலை


உடுமலை ஒன்றியத்தில், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் (பொது, பெண்) பதவி இடம் காலியாக உள்ளது. இப்பதவிக்கு, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேச்சை தரப்பில், தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர்.இருப்பினும், நேற்றுமுன்தினம் வரை, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நேற்று, ஒரே நாளில் மூன்று பேர் மனுத்தாக்கல் செய்தனர்.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'நேற்று, உமா, கலாமணி, அன்னலட்சுமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளையே, இறுதி நாள் என்பதால், அதிகப்படியானோர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், 23ல், வேட்புமனுக்கள், பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்,' என்றனர்- நிருபர் குழு -.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X