நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு உள்ளிட்ட, மத்திய அரசின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்தும், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், கிழக்கு மாவட்ட, காங்., தலைவர் சித்திக், கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், வி.சி., மாவட்ட செயலாளர் மணி மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* நாமக்கல்- சேலம் சாலையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். நகர பொறுப்புக்குழு உறுப்பினர் செல்வமணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பால் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.