குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சார்பில், மாஸ் கிளீனிங் நடந்தது. மாநிலம் முழுவதும் நேற்று முதல், 25 வரை மாஸ் கிளீனிங் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பணியை துவக்கி வைத்தார். முதல் நாளான நேற்று அபெக்ஸ் காலனி, பாரதி நகர்,கோம்பு பள்ளம், உடையார்பேட்டை கோம்பு பள்ளம் ஆகிய இடங்களில் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது.