நாமக்கல்: ஊதிய உயர்வு வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு அளித்தனர். மனு விபரம்: நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைக்காவலர்கள் கிராமப்புறங்களில் காலை, 7:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை பணி செய்து வருகிறோம். தற்போது மாத ஊதியம், 3,600 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அது மிகவும் குறைவாக இருப்பதால் அந்த ஊதியதத்தை, 6,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.