சிறுமியை கடத்தி பஞ்சாயத்து: பெற்றோர் மீதும் தாக்குதல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
சிறுமியை கடத்தி பஞ்சாயத்து: பெற்றோர் மீதும் தாக்குதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:37

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஈச்சப்பாறையை சேர்ந்தவர் சூர்யா, 24; இவருக்கு நாமகிரிப்பேட்டையை சேர்ந்த டிரைவரின் மகளான பிளஸ் 1 மாணவி, தங்கை முறை உறவு. இரு நாட்களுக்கு முன் மாணவியை ஆசை வார்த்தை கூறி, சூர்யா கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை தன் மகளை அழைத்து வந்துவிட்டார் இதுகுறித்து புகார் கொடுக்க அவர் சென்றபோது, சூர்யா தரப்பினர் சமாதானம் பேச பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். அப்போது, சிறுமியின் பெற்றோரையும் உறவினரையும் சூர்யாவுடன் வந்த வெளியூர் ஆட்கள் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த, 3 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதையடுத்து சூர்யா, அவரது நண்பர் கோபி உள்ளிட்ட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அதேசமயம், சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் வந்த காரை அடித்து நொறுக்கியதாக, சிறுமியின் அண்ணன், 17 வயது சிறுவன் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X