குளித்தலை: குளித்தலை நகராட்சி கமிஷனராக சுப்புராம் நேற்று பொறுப்பேற்றார். இவர், வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து, பணி உயர்வுடன் பணியிடம் மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். அவருக்கு, நகராட்சி பொறியாளர் ராதா, சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.