கரூர்: கரூரில் உள்ள கோவில்களில், நேற்று வழக்கம் போல் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோவில்களில் அன்ன தான உணவு பொருட்கள் பார்சலில் வழங்கப்பட்டு வந்தன. நேற்று முதல் கோவில்களில் பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்படும் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் ஆகியவற்றில், வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டது.