மதுரை : தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி அமலாக்க அதிகாரிகள் நடத்திய ஆய்வில் காரியாபட்டி, திருச்சி, பந்தல்குடி, திருமங்கலம், மதுரையில் 18 மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு ரூ.6,71,957 இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்ற நடவடிக்கையை தவிர்க்க, குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ. 48,000 சமரச தொகை வழங்கியதால் போலீஸ் புகார் அளிக்கவில்லை.இதுபோல் மின் திருட்டு சார்ந்த தகவல்களை 94430 37508 என்ற அலைபேசியில் தெரிவிக்கலாம் என மதுரை அமலாக்க பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.