திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியல் வெளியிட வேண்டும் | மதுரை செய்திகள் | Dinamalar
திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியல் வெளியிட வேண்டும்
Added : செப் 21, 2021 | |
Advertisement
 

மதுரை : மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு வி.ஏ.ஓ.க்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென பதவி உயர்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



மதுரையில் மாநில அமைப்பாளர் ஜெயகணேஷ் இணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன் அருண்குமார் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் 2008ல் வி.ஏ.ஓ. வாக சேர்ந்த இருவருக்கு அரசு பணியாளர்கள் சட்டம் 14/2006 ன் படி பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் 2008 ல் வி.ஏ.ஓ.வாக சேர்ந்தவர்களுக்கு பாரபட்சமாக பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் 2008 2012 2013 2015 2016 ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு சில மாவட்டங்களில் பதவி உயர்வும் சில மாவட்டங்களில் பதவி உயர்வு வழங்கப்படாமலும் குளறுபடி நிலவுகிறது.எனவே மாநிலம் முழுமைக்கும் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியலை ஆண்டு வாரியாக வெளியிட்டு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X