கேரளா லாட்டரிகள்; தபால் மூலம் வேலூரில் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
16:44

வேலுார்: கேரளா லாட்டரிகள், தபால் மூலம் வேலுாரில் விற்பனை செய்யப்படுகிறது.



சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை. இந்நிலையில், வேலுாரில் பலர் கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்படும் லாட்டரி சீட்டு விற்பனை மையங்களுக்கு பணத்தை கூகுல் பே மூலம் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கேட்கும் லாட்டரி சீட்டுக்களை பேக் செய்து தபால் மூலம் வேலுாருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.



கடந்த சில மாதங்களாக திருவனந்தபுரத்தில் இருந்து கேரளா லாட்டரி சீட்டுக்கள் வேலுாருக்கு அதிகளவு தபால் அலுவலகம் மூலம் சாதாரண தபால், ஸ்பீடு போஸ்ட் மற்றும் தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அதிகளவு பார்சல்கள் வருகின்றன. லாட்டரி சீட்டுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. பரிசு விழுந்தால் தொகை ஆன்லைனில் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகின்றன.



இது குறித்து வேலுார் போலீசார் கூறியதாவது: லாட்டரி சீட்டு, மூணு சீட்டு, காட்டன் சூதாட்டம் போன்றவற்றால் வேலுாரில் பல குடும்பங்கள் கடனில் சிக்கியுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் கள்ளத்தனமாக வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்பு வேலுாரில் உள்ள சில ஏஜெண்ட்டுக்கள் மூலம் கேரளா மாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன.



நிறைய ஏஜெண்ட்டுக்களை பிடித்ததால் தற்போது நடப்பதில்லை. அதற்கு பதில் தபால் மூலம் கேரளா லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. விசாரணையில் ஒரு மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு கேரளா லாட்டரி சீட்டுக்கள் வேலுாருக்கு தபால் மூலம் வருவது தெரியவந்துள்ளது. அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X