சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை | கரூர் செய்திகள் | Dinamalar
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
17:32

கரூர்: உப்பிடமங்கலம் அருகே பள்ளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 40; கூலி தொழிலாளி. இவர், 2019 டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த, எட்டு வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, சரவணனை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சரவணனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X