வார்டு மறுவரையரை செய்யும் பணி முடிந்ததும் மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் நேரு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
17:36

சேலம்: ''தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள்; 29 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை சீரமைக்க, வார்டு மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. அப்பணி நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு சேலத்தில் கூறினார்.


சேலம், அம்மாபேட்டை சீலாவாரி ஏரி, தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் நேரு, வாய்க்கால்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டு 'நகருக்குள் வனம்' உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மழைநீர் வடிகால் மற்றும் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும். அப்பணிக்காக, 9,097 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 97 ஆயிரத்து,550 பணியாளர்கள் ஈடுபடுவர். மேற்பார்வையிட, 4,623 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நடப்பாண்டு, 200 குளங்கள் தூர்வாரி மழைநீர் சேகரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகள், நிலத்தடி நீரை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மையை துரிதப்படுத்துதல், கழிவறைகள் புதிதாக கட்டுதல், பழைய கழிவறைகளை புதுப்பித்தல் போன்ற வளர்ச்சி பணிகளை, நகராட்சி நிர்வாகத்துறை செய்து வருகிறது. சேலம் மாநகராட்சியில், நகருக்குள் வனம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். தமிழகத்தில் புதிதாக மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்கள் உருவாக்கப்படும்.


சென்னையில் பக்கிங்காங் கால்வாய், அடையாறு, கூவம் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணி நடக்கிறது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காமல், அதை மறுசுழற்சி செய்யும் பணி சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. அது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தி, நீர்நிலைகள் மேம்படுத்தப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுப்படுத்த, திட்ட அறிக்கை தயாரித்து,அப்பணி துரிதப்படுத்தப்படும். பாதாள சாக்கடை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை உண்டு. தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள்; 29 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை சீரமைக்க, வார்டு மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. அப்பணி நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மூன்று லட்சத்துக்கும் அதிகமான, மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை, 58 ஆகவும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் இருந்தால், 80 வார்டாகவும் உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X