எனக்கு வங்கியில் ரூ 40 கோடி கடன் உள்ளது: முன்னாள் அமைச்சர் வீரமணி பேட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
17:41

திருப்பத்தூர்: ''எனக்கு வங்கியில், 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நான் வருமான வரி கட்டி வருகிறேன். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.


முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரணியின் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீடு, அவரது ஆதரவாளர்கள் என, 35 இடங்களில் கடந்த, 16 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தில் நகை, கார், மணல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திருப்பத்தூரில் மாஜி அமைச்சர் வீரமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்திகள் வருகின்றன. பத்திரிக்கை தர்மம் உள்ளது. ஆதாரத்துடன் செய்திகளை வெளியிடுங்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் என் வீட்டில் பணமோ, கிலோ கணக்கில் நகையோ, கைப்பற்றப்படவில்லை. என்னிடம் கைப்பற்றிய, 5,600 ரூபாய் மற்றும், 500 பவுன் நகைக்கு கணக்கு உள்ளது என்பதால் திருப்பி கொடுத்து விட்டனர். நான், 7 வது படிக்கும் போதே என் தந்தை பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார். நான் தற்போது வைத்திருக்கும் ரோல்ஸ் ராய் கார் மிகவும் பழமையனது. அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் தான் இருக்கும். சிறு வயதில் இருந்தே கார் வாங்கி வருவது எனக்கு பழக்கம். பள்ளியில் படிக்கும் போதே ஜெர்மன் மெர்சிடீஸ் பென்ஸ் கார் வைத்திருந்தேன். நான் நடத்திய பீடித் தொழில், விவசாயத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர். என் மனைவிகளும் வசதி படைத்தவர்கள். வீட்டின் பின்புறம் வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்திருந்தேன். அதற்கு ரசீதும் என்னிடம் உள்ளது. அமெரிக்க டாலர், 1. 75 லட்சம் மதிப்புள்ளது மட்டுமே கைப்பற்றப்பட்டது. என் மகள் ஆஸ்தியேலியாவில் படிக்கச் செல்வதால் சட்ட விதிகளின் படியே வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தேன். 5,000 டாலர்கள் வரை வைத்துக் கொள்ளலாம் என சட்டம் உள்ளது. நான் எதையும் மறைக்கவில்லை. நான் ஆடம்பரத்தை விரும்பாதவன், மிகவும் எளிமையானவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எல்லாம் எங்களுக்கு எதற்கு. எனக்கு வங்கியில், 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நான் வருமான வரி கட்டி வருகிறேன். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன். சமூக வலைதளத்தில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறு. இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், என் பெயர், புகழ், பாதிக்கப்படாமல் உண்மை செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X