ஓசூர்: ஓசூரில், அசோக்லேலண்ட் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் 2ல், அசோக்லேலண்ட் யூனிட் 2 இயங்கி வருகிறது. இங்கு, 1,640 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். ஆனால், ஏற்கனவே இருந்த ஊதிய ஒப்பந்தம் முடிந்து, 15 மாதங்கள் முடிந்தும், புதிய ஒப்பந்தம் போடப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும், ஊதிய பேச்சுவார்த்தைக்கு முன்பே, உற்பத்தி திணிப்பை கண்டித்தும், எண்ணூர் அசோக்லேலண்ட் தொழிலாளர்களுக்கு இணையாக, சம சர்வீசுக்கு, சம சம்பளம் வழங்க வலியுறுத்தியும், 500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் நிறுவனம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என, கோஷங்களை எழுப்பினர்.