கிருஷ்ணகிரி:மாவட்டத்தில் பரவலான மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழையால், ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வினாடிக்கு, 239 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 302 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு வாய்க்கால் மூலம், 177 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக போச்சம்பள்ளியில், 67.4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ஓசூர், 46, நெடுங்கல், 41, பெனுகொண்டாபுரம், 37.4, கிருஷ்ணகிரி, 19.6, பாரூர், 16.2, தளி, 15, சூளகிரி, 14, ஊத்தங்கரை, 12, ராயக்கோட்டை, 10, தேன்கனிக்கோட்டை, 3, என மொத்தம், 281.5 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.