அங்ககச்சான்று பெற்று அமெரிக்கா செல்லும் தொப்பம்பட்டி தேங்காய்: 6 மாதங்களில் 22 டன் ஏற்றுமதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
23:10

திண்டுக்கல்:'அங்ககச்சான்று பெற்ற தொப்பம்பட்டி தேங்காய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது'' என திண்டுக்கல் அங்ககச்சான்று உதவி இயக்குனர் வரதராஜன் கூறினார்.



நஞ்சில்லாத இயற்கை முறையில் விளைவித்த உணவுப் பொருளை உண்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளிலும் அவற்றின் தேவை அதிகரித்துள்ளதுஅவ்வாறு விளைவிக்கும் பொருட்களுக்கு அங்ககச்சான்று துறை மூலம் சான்று அளிக்கப்படுகிறது.



மாவட்டத்தில் இதுவரை 70 தனி நபர்களும் 10 குழுக்களும் 3 வணிக நிறுவனங்களும் அங்ககச்சான்று பெற்றுள்ளனர்.இதில் தொப்பம்பட்டி கோட்டத்துறை விவசாயி மோகன்குமார் 19 ஏக்கரில் தென்னையும் 10 ஏக்கரில் நெல்லியும் சாகுபடி செய்துள்ளார். இவரது தோட்டத்தில் இருந்து தேங்காய் மாதிரி எடுத்து மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.



ஆய்வில் ரசாயன பொருட்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் இருந்ததால் தேங்காய் ஏற்றுமதி செய்ய பரிவர்த்தனை சான்று வழங்கப்பட்டது. இதன்பின் கடந்த 6 மாதங்களில் 22 டன் தேங்காயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளார்.


75 சதவீதம் லாபம்





விவசாயி எஸ்.மோகன்குமார் கூறியதாவது: பி.இ. ரோபோட்டிக்ஸ் படித்துள்ளேன். விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளேன். அங்ககச் சான்று பற்றி அறிந்து 2009ல் அதனைப் பெற்றேன். இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு இச்சான்று அவசியம். அப்போது தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலும். கடந்த 6 மாதங்களாக அமெரிக்காவிற்கு தேங்காய் ஏற்றுமதி செய்து வருகிறேன். இதன் மூலம் 75 சதவீதம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. உள்ளூரில் விலையில்லையே என இனி விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை என்றார்.


சான்று பெற வழி





அங்ககச்சான்று உதவி இயக்குனர் வரதராஜன் கூறியதாவது: அங்ககச்சான்று பெற விண்ணப்ப படிவம் 4 நகல் பண்ணையின் பொது விபரக் குறிப்பு வரைபடம் மண் நீர் பரிசோதனை விபரம் நில ஆவணம் பதிவுக் கட்டண ரசீதுடன் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2700 இதர விவசாயிகளுக்கு ரூ.3200 குழுவிற்கு ரூ.7200 வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X