ரோடு வசதி, தெரு விளக்கு இல்லாமல் சிரமம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
00:10

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே செந்தமிழ் நகரில் ரோடு வசதி, தெரு விளக்கு இல்லாமல் சிரமப்படுவதாக செந்தமிழ் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆர்.தட்சிணாமூர்த்தி, செயலாளர் என்.காசிநாதன், உதவி தலைவர் என்.ராஜகோபால், செயற்குழு உறுப்பினர்கள் என்.ராஜேந்திரன், எம்.ராஜா ரவீந்திரன், ஆர்.பாண்டி, என்.கோபால், ஏ.சதாசிவம் தெரிவித்தனர்.



அவர்கள் கூறியதாவது:செந்தமிழ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 2015ல் பதிவு செய்யப்பட்டு நிர்வாக குழு தேர்தல் நடத்தி பொறுப்பேற்றது. அன்று முதல் இதுவரை குடியிருப்போர் நலனுக்காக பாடுபடுகிறது. ஆண்டு தோறும் சங்க ஆண்டு விழா நடத்தி, குழந்தைகளுக்கு போட்டி நடத்தி பரிசளிப்போம். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விழா நடத்த முடியவில்லை.செந்தமிழ் நகர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துஉள்ளது. மண்டபம் ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது. செந்தமிழ் நகர் 1 முதல் 4 வரை நான்கு மெயின் தெருக்களும், இதனுடன் சேர்ந்த தென்றல் நகர், மணிநகர், முத்தமிழ் நகர், கஜினி நகர் பகுதிகளும் செந்தமிழ் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தில் வருகின்றன.



சங்கத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு 135 குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் மேலும் 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். அவர்களையும் சங்கத்தில் இணைக்க உள்ளோம்.ரோடு வசதி இல்லைசெந்தமிழ் நகர் நான்கு மெயின் தெருக்களிலும் சாலை மோசமாக உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன் அமைத்த இந்த சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. குண்டும் குழியுமாகவும், சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.



தென்றல் நகர், கஜினி நகர், மணிநகர், முத்தமிழ் நகர் பகுதிகளில் சாலைகளே இல்லை. மண்பாதையில் குடியிருப்புகளுக்கு செல்கின்றனர். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாவதால் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர். அனைத்து பகுதியிலும் சாலை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மின் சப்ளையில் பிரச்னை



தெருக்களில் போதுமானமின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. பல தெருக்களில் இருள் சூழ்ந்துள்ளது. தற்போது ஆங்காங்கே சோலார் விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் பொருத்தி இருந்தாலும் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும், அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் ஒரே இடத்தில் சேஞ்ச் ஓவர் மெயின் இருப்பதால், அடிக்கடி மின் அழுத்தத்தில் பிரச்னை ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. இந்த பிரச்னையை போக்க இரண்டு இடங்களில் சேஞ்ச் ஓவர் அமைக்க வேண்டும்.நுாலகம் தேவைகுடியிருப்பு பகுதியில் மாணவர்கள், இளைஞர்களின் நலன் கருதி கிளை நுாலகம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். நுாலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X