ஓட்டு பார்வையிட்ட கலெக்டர் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஓட்டு பார்வையிட்ட கலெக்டர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
00:14

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 6 கிராம ஊராட்சி தலைவர்கள், 33 வார்டு உறுப்பினர் என மொத்தம் 40 இடம் காலியாக உள்ளது.



தேர்தல் அக்.9ல் நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையமான பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரகலா ஆய்வு மேற்கொண்டார்.



வாக்கு பெட்டி பாதுகாப்பு அறை, அப்பகுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், போலீசார் பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி., கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்தும், மாவட்ட எஸ்.பி., கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்முருகன், ஊராட்சிகளின்உதவி இயக்குனர் கேசவதாசன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன் பார்வையிட்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X