மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
00:18

ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார், ராதானுார், சாத்தனுார், விசவனுார், வண்டல், அளவிடங்கான், திருத்தேர்வளை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையை பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.



இப்பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட பின்பு, மழை இல்லாததால், வயல்களில் உள்ள விதைநெல் மயில், கவுதாரி உள்ளிட்ட பறவை இனங்களுக்கு உணவுகளாக மாறிவருகின்றன.இப்பகுதிகளில் நெல் விதைப்பு செய்யப்பட்ட போது நன்கு ஈரப்பதம் நிலவிய, ஒரு சில வயல்களில் மட்டுமே, நெல் பயிர்கள் முளைத்துள்ளன.



இவ்வாறு முளைத்த வயல்களில், விவசாயிகள் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான வயல்களில், விதைப்பு செய்யப்பட்ட நிலையில், மழை இல்லாததால் நெல் பயிர்கள் முளைக்க போதிய ஈரப்பதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X