தொடக்கப்பள்ளியை தொடங்கி வைங்கப்பா! ஏழை குழந்தைகளை படிக்க விடுங்கப்பா | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தொடக்கப்பள்ளியை தொடங்கி வைங்கப்பா! ஏழை குழந்தைகளை படிக்க விடுங்கப்பா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
01:14

கோவை;வெள்ளலுார் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்திற்குள் கட்டப்பட்ட, புதிய தொடக்கப்பள்ளிக்கு, கல்வித்துறை அனுமதி தராமல், மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.வெள்ளலுாரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு, மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் பள்ளிக்கூடங்கள் இல்லை. இதனால், இங்குள்ள குழந்தைகளின் நலனுக்காக, புதிய தொடக்கப்பள்ளி, குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டது.இக்கட்டடம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தொடக்க கல்வி அலுவலராக இருந்த, பாலுமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, புதிய தொடக்கப்பள்ளி அனுமதி வேண்டி விண்ணப்பித்தும், கல்வித்துறை ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக, சமீபத்தில் ஆசிரியர் சங்கங்கள் சார்பில், கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் பள்ளிக்கு அனுமதித்தால் கூட, சேர்க்கைக்கு சிக்கல் இருக்காது என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்கபாசு கூறுகையில், ''குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை சுற்றி, கிட்டத்தட்ட 350 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளி கட்டி முடித்து, கல்வித்துறையிடம் ஒப்படைத்தும், கற்பித்தல் பணிகள் துவங்க, அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.தற்போது கிட்டத்தட்ட, 5 கிலோமீட்டர் அப்பால் உள்ள, வெள்ளாளப்பாளையம் பகுதி அரசுப்பள்ளியை தேடி மாணவர்கள் செல்கின்றனர். எனவே, இப்பள்ளிக்கு கல்வித்துறை விரைவில் அனுமதி வழங்கி, ஆசிரியர்களை நியமிக்க முன்வர வேண்டும்,'' என்றார்.பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் சிவபிரகாசம் கூறுகையில்,''இப்பள்ளிக்கு அனுமதி அளிப்பது குறித்து, ஆய்வு மேற்கொண்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X