ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க... பணம் இல்லை! கூட்டுறவு கடன் சங்கங்கள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 செப்
2021
02:18
பதிவு செய்த நாள்
செப் 22,2021 01:15

கோவை:போதுமான நிதியாதாரம் இல்லாததாலும்,கடன் தள்ளுபடி குறித்துஅரசின் முறையான அறிவிப்பு வெளியாகாததாலும், கூட்டுறவு கடன் சங்கங்கள் வருவாயை இழந்து, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே தள்ளாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.கோவையில், 36 கூட்டுறவு பண்டகசாலை மற்றும் இரண்டு மொத்த விற்பனை சங்கங்கள் உள்ளன. இவை தவிர, 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 13 பிரதான விற்பனை சங்கங்கள்(மார்க்கெட்டிங்) உள்ளன. அவற்றோடு, 1,401 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன.



இதில் சுமார் 1,000 பேர் பணிபுரிகின்றனர்.இவையனைத்தும், கோவை மண்டல கூட்டுறவுத்துறை இணை பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததால், ஏராளமான கூட்டுறவு சங்கங்களில் வருவாய் ஆதாரம் குறைந்து போனது.இச்சூழலில், தற்போதைய ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஐந்து பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டது.முதல், 82,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கபட்டது. பின்னர், 6,000 கோடி ரூபாய்க்கு தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.



இதனால் கடன்தாரர்கள் வட்டி கூட செலுத்துவதில்லை.இதனால், கோவையிலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில், போதுமான வருவாய் ஆதாரம் இல்லாமல், அன்றாட அலுவலகம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் கூட நிதியில்லாத நிலை நீடிக்கிறது.



இது குறித்து, கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் கூறியதாவது:அரசின் தங்கநகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானதிலிருந்து, நகைக்கடனுக்கான வட்டியை கடன் பெற்றவர்கள் யாரும் செலுத்துவதில்லை. காலாவதிக்காலம் முடியும் தருவாயிலுள்ள நகைக்கான தொகையை செலுத்தி, புதுப்பிக்கக்கூட யாரும் முன் வருவதில்லை.இதனால் வழக்கமாக கூட்டுறவு சங்கங்களுக்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வருவாயாக வந்து சேர வேண்டிய தொகை வந்து சேரவில்லை.கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு, தற்போது சங்கத்தின் வாயிலாக தொகையை வழங்கி விட்டு, அடுத்து அரசிடமிருந்து மானியமாக வரும் தொகையை, ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளலாம் என்ற சூழலும் தற்போதைக்கு இல்லை.



போதுமான நிதியாதாரம் இல்லாததால், பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் ரேஷன்கடை பணியாளர்களுக்கு, மாதச்சம்பளம் கொடுக்க முடியவில்லை.பணியாளர்கள் கடும் சிரமத்தில் திணறி வருகின்றனர்.அரசு தள்ளுபடி அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அரசோ, நகைக்கடன் அறிவிப்பை தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறது.அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின்புதான், மாற்றுத்திட்டம் குறித்து யோசித்து நல்லதொரு முடிவெடுக்க முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202115:44:25 IST Report Abuse
ராஜா வருமானத்துக்கு உண்டான வழிகளை எல்லாம் மூடிவிட்டு தள்ளுபடி செய்தால் இது தான் நடக்கும். இங்கிருக்கும் அதிகாரிகள் அதுபோன்ற இலவச அறிவிப்பு வரும்போது வாயில் கொழுக்கட்டையா வைத்திருந்தார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X