தூய்மை பணியாளர்களின் பிரச்னை ஆயிரம்: இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தீர்வு கிடைக்குமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
01:16

கோவை:கொரோனா தொற்று பரவியபோது, உயிரை துச்சமாக நினைத்து, கோவையில் சந்து பொந்தெல்லாம் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்தவர்கள், துாய்மை பணியாளர்கள்.அவர்களின் சேவையை உணர்ந்த மக்கள், மாலை மரியாதை செய்து கவுரவித்தனர். அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம்.இச்சூழலில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன், கோவையில் துாய்மைபணியாளர் வசிக்கும் காலனிகளை இன்று (22ம்தேதி) ஆய்வு மேற்கொள்கிறார். பின், கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.அவரது கவனத்துக்காக, துாய்மை பணியாளர்களின் பிரச்னைகளில் சில... மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கும், ஒப்பந்த பணியாளர்களுக்கும் சம்பள முரண்பாடு தொடர்கிறது. நிரந்தர பணியாளருக்கு மாத சம்பளமாக, 35 ஆயிரத்துக்கும் அதிகமாக வழங்கப்படுகிறது. ஒப்பந்தபணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.17 ஆயிரம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது; அதை அமல்படுத்துவதில்லை.மாறாக, கலெக்டர் நிர்ணயித்ததினக்கூலி என, ரூ.450 வழங்கப்படுகிறது. இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம்போக, ஒவ்வொரு தொழிலாளிக்கும், 9,000 ரூபாயே சம்பளம் வழங்கப்படுகிறது.பி.எப்., தொகை எவ்வளவு இருக்கிறது என்கிற விபரம் தொழிலாளர்களுக்கு தெரிவதில்லை. இதில், ஈரோடு மாவட்டத்தில், தினக்கூலியாக ரூ.650 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, சமீபகாலமாக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகி வருகிறது. ஒவ்வொரு மாதமும், 15ம் தேதிக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுகிறது. ஒப்பந்த பணியாளர் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது; மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை, சீனியாரிட்டி அடிப்படையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மை பணியாளர்களில், பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு, கல்வித்தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு வழங்க வேண்டும்; பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணி வழங்கலாம் என்கிற அரசாணையை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை, காத்திருக்க வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை நியமிக்கும்போது, கல்வித்தகுதிக்கு உரிய பணியிடம் ஒதுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க வேண்டும். காலுறை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.இத்தகைய பிரச்னைகள் தீரும் என்கிற எண்ணத்தில், துாய்மை பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.பணி நேரத்தால் சிரமம்வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி, கோவைப்புதுார், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணியாளர்கள் வசிக்கின்றனர். காலை, 5:45 மணிக்கு பணிக்கு வர வேண்டுமென நிர்பந்திக்கப்படுகின்றனர்.நகர எல்லையை தாண்டி வசிக்கும் அவர்களை, அதிகாலை நேரத்தில் வரச்சொல்வதால் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X