குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
01:37

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே பன்னிமடையில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகத்தில் குளறுபடிகள் நீடிக்கின்றன.சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.இதை சரிப்படுத்தக் கோரி, பொதுமக்கள் சார்பில், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதில் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் தலைமையில், துடியலுார் தடாகம் சாலையில், பன்னிமடை பஸ் நிலையம் அருகே, மறியலில் ஈடுபட்டனர்.இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு பன்னிமடை ஊராட்சி தலைவர் ரத்தினம் மருதாசலம், வி.ஏ.ஓ., சுரேஷ் மற்றும் போலீசார் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, சீரான குடிநீர் வழங்கவும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உறுதியளித்தனர்.இதையடுத்து, பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X