'கிராவல்' மண் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'கிராவல்' மண் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
02:02

ஆனைமலை:ஆனைமலை, மஞ்சநாயக்கனுார் அருகே, அனுமதி பெறாமல் 'கிராவல்' மண் கடத்திய, மூன்று டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், ஆழியாறு எஸ்.ஐ., முத்துக்குமார் தலைமையிலான போலீசார், மஞ்சநாயக்கனுார் கோபால்பதி செட்டில்மென்ட் அருகே, ரோந்து சென்றனர்.அப்போது, அங்கு தனியார் பட்டா நிலத்தில் உரிய அனுமதியின்றி 'கிராவல்' மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மண்ணை கடத்திய, மூன்று டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஓட்டி வந்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன், 22, பழனிசாமி, 35, கிருஷ்ணகுமார், 34, மற்றும் முருகன், 35, ஆகியோரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'தனியார் பட்டா நிலத்தில், வருவாய்த்துறை அனுமதியின்றி 'கிராவல்' மண் கடத்திய குற்றத்துக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் உரிமையாளர் அங்கலக்குறிச்சியை சேர்ந்த பூபாலன் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X