'பாலீஷ்' போடுவதாக நடித்து திருட முயன்ற வாலிபர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'பாலீஷ்' போடுவதாக நடித்து திருட முயன்ற வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
02:03

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நகைக்கு 'பாலீஷ்' போட்டுத் தருவதாக நடித்து, பெண்ணிடம் தங்க செயின் திருட முயன்ற, பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, மரப்பேட்டை வீதி, நாகவேந்திரன் மனைவி கற்பகவல்லி, 26, இல்லதரசி. இவர் வீட்டுக்கு வந்த, வடமாநில இளைஞர் ஒருவர், தங்க நகைகளுக்கு 'பாலீஷ்' போட்டுத் தருவதாக கூறியுள்ளார். கற்பகவள்ளி, தன் கழுத்தில் இருந்த, முக்கால் பவுன் தங்க செயினை கொடுத்துள்ளார்.அதை 'பாலீஷ்' செய்து கொண்டே, வேறு நகைகள் இருந்தாலும் எடுத்து வாருங்கள்; சலுகை கட்டணத்தில் 'பாலீஷ்' செய்து தருகிறேன், என, இளைஞர் கூறியுள்ளார்.இதையடுத்து, மற்ற நகைகளை எடுக்க கற்பகவல்லி வீட்டுக்குள் சென்றார். அப்போது, வாலிபர் கையிலிருந்த செயினுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அதைப் பார்த்து கற்பகவல்லி கூச்சலிட்டது, அங்கிருந்த மக்கள் வாலிபரை மடக்கிப்பிடித்து கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், 26, என்பதும், 'பாலீஷ்' போடுவதாக கூறி, ஏமாற்றி திருடுவதை தொழிலாக செய்வதும் தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X