தாசில்தார் அலுவலகத்தில் தீத்தடுப்பு பணி ஒத்திகை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தாசில்தார் அலுவலகத்தில் தீத்தடுப்பு பணி ஒத்திகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
02:03

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் பருவமழைக்கால மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடந்தது.கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் பங்கேற்ற, பேரிடர் கால பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை, தாசில்தார் சசிரேகா முன்னிலையில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், தீ விபத்து ஏற்படும் போது, தீயை அணைத்தல், தீ பரவாமல் தடுக்கும் முறைகள், தீயில் சிக்காமல் தப்பித்தல், பேரிடர் காலங்களில் மற்றவர்களை காப்பாற்றுதல் குறித்து ஒத்திகையும் நடத்திக்காட்டினர். இதில், தாசில்தார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X