வருவாய் கோட்டத்தில் 18 பேருக்கு தொற்று | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வருவாய் கோட்டத்தில் 18 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
02:04

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, மொத்தம், 18 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகரத்துக்கு உட்பட்ட குமரன் நகர் இரண்டாவது லே - அவுட், இந்திரா நகர், ஸ்ரீமன் நாரயணன் நகர் பகுதிகளில் தலா ஒருவருக்கு; தெற்கு வட்டாரம் சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி, கோமங்கலம் பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது.வடக்கு வட்டாரம் வெள்ளாளபாளையம், ஜமீன் காளியாபுரத்தில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், எட்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், கிணத்துக்கடவு போலீஸ் குடியிருப்பு, நல்லட்டிபாளையம் ஆகிய இடங்களில் நேற்று, இருவருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனைமலை தாலுகாவில், திவான்சாபுதுார், வேட்டைக்காரன்புதுார், பூச்சனாரி, ஆத்துப்பொள்ளாச்சி பகுதிகளில், நேற்று, மொத்தம் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறை தாலுகாவில், சின்கோனாவில் இரண்டு பேரும், வால்பாறை நகரில் ஒருவர் உட்பட மொத்தம் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வால்பாறை அரசு மருத்துவமனை கேர் சென்டரில், தற்போது, ஐந்து பேர் சிகிச்சை பெறுகின்றனர்.வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, நான்கு தாலுகாக்களில், நேற்று, மொத்தம், 18 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்த பகுதிகளில், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X