'ஆஷா' பணியாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'ஆஷா' பணியாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
02:07

வால்பாறை:மருத்துவ திட்டத்தில் பணியில், 'ஆஷா ' பணியாளர்கள் நியமிப்பது குறித்து, விரைவில் தீர்வு காணப்படும் என, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறினார்.வால்பாறையில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், பணி வழங்க வேண்டும், 'ஆஷா' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என, இரண்டாவது நாளாக காந்திசிலை வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே, நேற்று மாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், 'ஆஷா' பணியாளர்கள் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தைக்கு பின், சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அருணா பேசும்போது, நியாயமான கோரிக்கையை மாவட்ட கலெக்டர் வாயிலாக, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும்,' என்றார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X