கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
05:04

லாரியின் மீது பைக் மோதி வாலிபர் பலி


சேத்தியாத்தோப்பு: விருத்தாசலம் தாலுக்கா, விளக்கப்பாடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் நீலகண்டன், 37; இவரது மனைவி தீபா, மூன்று வயதில் மகன் உள்ளார். வெளிநாட்டிலிருந்த நீலகண்டன் 4 மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்த கருமகாரியத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று அதிகாலை 5.00 மணியளவில் சென்னை செல்லும் மனைவி தீபாவின் சகோதரர் தினேைஷ பைக்கில் அழைத்துச் வந்து சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் பஸ் ஏற்றி விட்டார். பின், வீட்டிற்கு திரும்பி சென்ற போது எறும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே நின்றிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.



பெண்ணிடம் நகை பறிப்பு



கடலுார்: கடலுார் அடுத்த வரக்கால்பட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அஞ்சலாட்சி. இவரது மகள் முத்துலட்சுமி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் கடலுார் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அஞ்சலாட்சி பிரசவ வார்டுக்கு வெளியே துாங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, தாலிக் கயிற்றில் இருந்த 6 கிராம் குண்டு, நானல் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துச் சென்றிருந்தனர். இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் ஆகும். கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு



நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பரிசமங்கலம் 4 வது தெருவை சேர்ந்தவர் தெய்வநாயகம்,39; இவரது தம்பி மூர்த்தி,35; மூர்த்தி குடித்து விட்டு வந்து தெய்வநாயகம் மனைவி ராதிகாவிடம் தகராறு செய்தார். இதை தெய்வநாயகம் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த மூர்த்தி தெய்வநாயகத்தை திட்டி தாக்கினார். பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். .செவிலியர் சாவு: போலீஸ் விசாரணைகடலுார்: கடலுார், கோண்டூர், எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் செல்வம் மனைவி துளசியம்மாள், 49; கடலுார் அரசு மருத்துவமனை செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் துாங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்காததால், செல்வம் எழுப்ப சென்றபோது, மயங்கி கிடந்தார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, துளசியம்மாள் இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.



கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது



கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த பஸ்சில் இருந்து இறங்கிய இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அவர்களை மடக்கி, சோதனை செய்தபோது, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த சிவச்சந்திரன், 21; சென்னை, கண்ணகி நகர் வேலு, 39; என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 15 ஆயிரம். தாய் மாயம்: மகள் புகார் பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சகுந்தலா,40; இவர் கடந்த 8 ம் தேதி காலை 8:30 மணிக்கு பண்ருட்டியில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இரவு சகுந்தலா வீடு திரும்பவில்லை. அவரது மகள் ரேவதி,15; கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.



பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு



நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி சங்கீதவாணி,33; இவர் வேகாக்கொல்லையில் உள்ள அக்கா கணவர் சுரேந்தரிடம் இருந்து பணத்தை வாங்கி வர ஸ்கூட்டரில் சென்றார். பத்திரக்கோட்டை அருகே வழியில் நின்றிருந்த கோ.சத்திரம் தணிகாசலம்,35; என்பவர் அவரை மடக்கி திட்டி தாக்கினார். புகாரின் பேரில் தணிகாசலம் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கார் மோதி மூதாட்டி பலிபுதுச்சத்திரம்: சென்னை அடுத்த நங்கநல்லுார் 34 வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், 69; இவர் கடந்த 11 ம் தேதி காரில், சென்னையிலிருந்து மாயவரத்திற்கு சென்றார். புதுச்சத்திரம் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதில் காரில் வந்த வெங்கட்ராமன், உறவினர்கள் பத்மாவதி, ராமநாதன், லட்சுமி படுகாயமடைந்து சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி, 85; நேற்று இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X