ரிலையன்ஸ் அலுவலகம் முற்றுகை நெய்வேலியில் திடீர் பரபரப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
ரிலையன்ஸ் அலுவலகம் முற்றுகை நெய்வேலியில் திடீர் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
06:01

நெய்வேலி : விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபடும் சப் கான்ட்ராக்டர்களுக்கு பணம் தராமல் காலதாமதம் செய்வதை கண்டித்து ரிலையன்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலுார் மாவட்டம், நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே ரிலையன்ஸ் நிறுவனத்தாரின் கிளை அலுவலகம் செயல்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் டெண்டர் எடுத்துள்ள விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு வரையிலான தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.45 சி) விரிவாக்கப் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக கனரக வாகனங்கள், லாரிகள், பொக்லைன், பெட்ரோல் நிறுவனம் மற்றும் லேபர் சப்ளை செய்வது என பல்வேறு சப் கான்ட்ராக்டர்கள் கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.



இவர்களுக்கான பணத்தை கடந்த 2 ஆண்டுகளாக தராமல் ரிலையன்ஸ் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி பாதித்தவர்கள் நேற்று மதியம் நெய்வேலியில் உள்ள ரிலையன்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இது குறித்து தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X